Monday, May 4, 2015

படித்ததில் பிடித்தது

ஒரு சிறுவன் மிகுந்த கோபக்காரனாக இருந்தான் . அவனுக்கு கோபம் வந்தால் கத்தி தீர்த்து விடுவான் . இந்த பழக்கத்தை எப்படி மாற்றுவது என யோசித்த அவனது தந்தை அவனிடம் கை நிறைய ஆணிகளையும் சுத்தியலையும் கொடுத்தார் . " இனி மேல் கோபம் வந்தால் நம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடி " என்றார் .

முதல் நாள் 7 ஆணிகள் ,

மறுநாள் 5 ஆணிகள் என்று அடித்தான் சிறுவன் . ஆணி அடிக்க அடிக்க கோபம் குறைந்தது .
ஒரு நாள் ஒரேயொரு ஆணிதான் அடித்திருந்தான் . எண்ணி பார்த்தால் 45 ஆணிகள் .

அப்பா சொன்னார் , " இனி, கோபம் வராத நாட்களில் ஒவ்வோர் ஆணியாக பிடுங்கி விடு"

45 நாட்களில் பழைய ஆணிகள் பிடு ங் கபட்டுவிட்டன . பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான் .

அப்பா சொன்னார்," ஆணிகளை பிடுங்கி விட்டாய் சுவற்றில் உள்ள ஓட்டைகளை என்ன செய்வாய் ?

உன் கோபம் , இது போன்று பலரை காயபடுத்தி இருக்கும் அல்லவா ?. என்றதும் வெட்கி தலைகுனிந்து - செய்த தவறை உணர்ந்தான் .

பிறரை காயப்படுத்துவதை நிறுத்தினால் வாழ்க்கை புதிய அர்த்தம் பெரும் .

படித்ததில் பிடித்தது

Thanks to Original up loader

1 comment:

  1. ரொம்ப நல்லா இருக்கு!!!

    ReplyDelete